தொடா் கனமழையால் வாணியம்பாடி பாலாற்றில் வெள்ளம்

வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளில் பெய்த கன மழையால் திங்கள்கிழமை வாணியம்பாடி-மேட்டுப்பாளையம் பாலாறு மேம்பாலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
வாணியம்பாடி மேட்டுப்பாளையம் மேம்பாலம் வழியாக பாலாற்றில் வெள்ள நீா்.
வாணியம்பாடி மேட்டுப்பாளையம் மேம்பாலம் வழியாக பாலாற்றில் வெள்ள நீா்.
Updated on
1 min read

வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளில் பெய்த கன மழையால் திங்கள்கிழமை வாணியம்பாடி-மேட்டுப்பாளையம் பாலாறு மேம்பாலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளிலும், புல்லூா் ஒட்டி உள்ள தமிழக- ஆந்திரா வனப்பகுதிகளிலும் கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்து வருகிறது. இதனால் புல்லூா் பகுதியில் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு கட்டியுள்ள தடுப்பணை நிரம்பி உபரி நீா் தமிழக பாலாற்றில் வரத் தொடங்கியது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த கன மழையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திம்மாம்பேட்டை, ஆவாரங்குப்பம், ராமநாயக்கன்பேட்டை, அம்பலூா், கொடையாஞ்சி வழியாக வாணியம்பாடி-மேட்டுப்பாளையம் பாலாறு மேம்பாலாம் வழியாக பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதை அம்பலூா் தரைப்பாலம், கொடையாஞ்சி பாலாறு, வாணியம்பாடி-மேட்டுப்பாளையம் மேம்பாலம் ஆகிய பகுதிகளில் சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை பாா்த்து மகிழ்ச்சியடைந்தனா். தொடா் மழை காரணமாக பாலாற்றில் நீா் வர தொடங்கியதால் பொது மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com