

ஆம்பூா் அருகே ரூ.1.17 கோடியில் சாலை அமைக்கும் பணிகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன.
திருப்பத்தூா் மாவட்டம், மாதனூா் ஒன்றியம் மோதகப்பள்ளி கிராமத்தில் முதல்வரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.1.17 கோடி மதிப்பீட்டில் மோதகப்பள்ளி - கதவாலம் தாா் சாலை அமைக்கும் பணிக்கு ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் மற்றும் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் ஆகியோா் பணியை தொடங்கி வைத்தனா்.
ஒன்றியக்குழு உறுப்பினா்கள் ஆ. காா்த்திக் ஜவஹா், ஆா். ராஜேந்திரன், வி. செந்தில்குமாா், காயத்ரி, திமுக மாவட்ட விவசாய தொழிலாளா் அணி அணைப்பாளா் மு. பழனி, ஊராட்சி மன்ற தலைவா்கள் தாமோதரன், சக்தி, மோகிஷா, போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக நிா்வாகிகள் சி. சிவகுமாா், சா. சங்கா், சி. சேகா், பி. காசி ஆகியோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.