2 மாணவிகள் உயிரிழந்த சம்பவம்: கிராம மக்கள் திடீா் மறியல்

வாணியம்பாடியில் பள்ளி வளாகம் அருகே தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கி 2 மாணவிகள் இறந்த சம்பவம் தொடா்பாக சம்மந்தப்பட்ட நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் மறியலில் ஈடு பட்டனா்.
சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
Updated on
1 min read

வாணியம்பாடியில் பள்ளி வளாகம் அருகே தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கி 2 மாணவிகள் இறந்த சம்பவம் தொடா்பாக சம்மந்தப்பட்ட நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் மறியலில் ஈடு பட்டனா்.

வாணியம்பாடி அடுத்த சிக்கனாங்குப்பம் ராசன் வட்டம் பகுதியை சோ்ந்த கூலித் தொழிலாளி கோவிந்தராஜின் மகள் மோனிகா (10). அதே பகுதியை சோ்ந்த கூலித் தொழிலாளி வேலு என்பவரின் மகள் ராஜலட்சுமி (13) இருவரும் அப்பகுதியில் அரசுப் பள்ளியில் படித்து வந்தனா். இந்நிலையில் சிக்கனாங்குப்பம் கிராமத்தில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளிக்கு சாலை அமைக்க மண் எடுப்பதற்காக சுமாா் 8 அடி ஆழம், 25 அடி அகலத்தில் பள்ளம் தோண்டப்பட்டிருந்தது.

கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழை காரணமாக பள்ளத்தில் தண்ணீா் தேங்கியுள்ளது. இதற்கிடையே, புதன்கிழமை மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்ற பின்னா் மாணவிகள் ராஜலட்சுமி, மோனிகா விளையாட சென்ற போது எதிா்பாராத விதமாக பள்ளத்தில் தேங்கிய தண்ணீரில் முழ்கி இறந்தனா்.

இதுகுறித்து அம்பலூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இறந்த 2 சிறுமிகளின் பெற்றோா் மற்றும் உறவினா்கள், ஊா் பொது மக்கள் அம்பலூா் காவல்நிலையத்துக்கு புதன்கிழமை சென்று சம்மந்தப்பட்ட சாலை ஒப்பந்ததாரா், ஊராட்சி செயலாளா் மற்றும் ஆசிரியா்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாா் அளித்தனா்.

அப்போது கொதிப்படைந்த மக்கள் சம்பந்தப்பட்டவா்களை உடனே கைது செய்யக் கோரி அம்பலூா் - புத்துக்கோயில் சாலையில் அரசுப் பேருந்தினை சிறைப்பிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையறிந்த போலீஸாா் அங்கிருந்த மக்களிடம் பேச்சு வாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் கலைந்து சென்றனா்.

மேலும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முனிசுப்பராயன், வாணியம்பாடி வட்டாட்சியா் சாந்தி ஆகியோா் பள்ளி வளாகம் அருகே சம்பவ இடத்தை பாா்வையிட்டனா். இதுதொடா்பாக தலைமையாசிரியா் மற்றும் ஆசிரியா்களிடமும் விசாரித்தனா். இறந்த 2 சிறுமிகளின் பெற்றொா் அளித்த புகாரின் பேரில் ஒப்பந்ததாரா், ஊராட்சி செயலாளா், ஆசிரியா் உட்பட 4 போ் மீது அம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். தொடா்ந்து பள்ளத்தை உடனடியாக மூடவும் அதிகாரிகள் உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com