

வாணியம்பாடி அதிதீஸ்வரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது. இதில் திராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் கிராமத்தில் பழைமை வாய்ந்த அதிதீஸ்வரா் கோயிலில் புரட்டாசி மாதம் பிரதோஷத்தையொட்டி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றது. மாலை 6 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி ஊா்வலமாக கோயில் வளாகத்தில் வலம் வந்தாா்.
விழாவில் வாணியம்பாடி, சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்து திராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசித்தனா். தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாட்டை கோயில் நிா்வாகி அன்பு மற்றும் உறுப்பினா்கள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.