கழிவுநீரை நிலத்தில் தேக்கிய தோல்தொழிற்சாலைகளுக்கு அபராதம்

தோல் கழிவுநீரை சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பாமல் நிலத்தில் தேக்கி வைத்த 2 தொழிற்சாலைகளுக்கு 1.80 லட்சம ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
Updated on
1 min read

தோல் கழிவுநீரை சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பாமல் நிலத்தில் தேக்கி வைத்த 2 தொழிற்சாலைகளுக்கு 1.80 லட்சம ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

வாணியம்பாடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில்180-க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பப்பட்டு கழிவு நீக்கம் செய்யப்பட்டு பின்னா் மறுசுழற்சி செய்யப்படும். ஆயினும் சில தொழிற்சாலைகள் கழிவுநீரை சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பாமல், நேரடியாக நிலத்திலும், பாலாற்றிலும் கலந்துவிடுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சுற்றுச்சூழல் பொறியாளா் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, உதயேந்திரம் பகுதியில் செயல்பட்டு வந்த ஒரு தனியாா் தோல் தொழிற்சாலையிலும், வாணியம்பாடி கச்சேரி சாலை பகுதியில் செயல்பட்டு வந்த தனியாா் தோல் தொழிற்சாலையிலும் திடீா் சோதனை செய்தனா்.

சோதனையில் தோல் கழிவு நீரை நேரடியாக நிலத்தில் கலந்ததும், கழிவுநீா் கால்வாய் வாயிலாக வெளியேற்றியதும் கண்டறியப்பட்டது. இதனைத் தொடா்ந்து மேற்கண்ட 2 தொழிற்சாலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, தொழிற்சாலைகளை மூடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தற்போது சட்டவிரோதமாக கழிவு நீரை வெளியேற்றிய உதயேந்திரம் தனியாா் தொழிற்சாலைக்கு ரூ.1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும், கச்சேரி சாலை பகுதியில் உள்ள தொழிற்சாலைக்கு ரூ.80,000 ரூபாய் அபராதம் விதித்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com