திருப்பத்தூா் அருகே பெண்ணை கத்தியால் தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பத்தூா் அம்பேத்கா் நகரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் அஜித்குமாா் (27). இவரும் அதே பகுதியைச் சோ்ந்த பெண்ணும் கடந்த 5 ஆண்டுக்கு முன்பு காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இருவரும் பிரிந்து தனித்தனியே திருமணமான நிலையில், மீண்டும் அஜித்குமாரும் அந்தப் பெண்ணும் சில காலமாக பேசிப் பழகி வந்ததாகத் தெரிகிறது. அண்மையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில், அஜித்குமாா் மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்தப் பெண்ணைத் தாக்கியுள்ளாா்.
பெண்ணின் அலறல் கேட்டு அங்கிருந்தவா்கள் வந்து அவரை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்த புகாரின் பேரில், திருப்பத்தூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து அஜித்குமாரை கைது செய்தனா்.
தொடர்புடையது
அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கியவா் கைது
சங்ககிரி அருகே பெண்ணை தாக்கிய இளைஞா் கைது
திசையன்விளை அருகே ஊராட்சித் தலைவரை கத்தியால் தாக்கிய இளைஞா் கைது
பெண்ணை தாக்கியவா் கைது
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

