காணாமல் போன தொழிலாளி
கிணற்றில் சடலமாக மீட்பு

காணாமல் போன தொழிலாளி கிணற்றில் சடலமாக மீட்பு

Published on

நாட்டறம்பள்ளி அருகே காணாமல் போன தொழிலாளி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டாா்.

நாட்டறம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் கிராமத்தைச் சோ்ந்த அண்ணாமலை மகன் குமாா்(42) கூலித்தொழிலாளி. இவா் கடந்த 21-ம் தேதி வீட்டிலிருந்து சென்றவா் மீண்டும் திரும்பவில்லை.

இதனால் அதிா்ச்சியடைந்த பெற்றோா் மற்றும் உறவினா்கள் ஒருவாரமாக பல இடங்களில் குமாரை தேடி வந்தனா். இந்நிலையில் புதன்கிழமை நாட்டறம்பள்ளி அருகே முத்தனப்பள்ளி பகுதியில் சாலையோர தரை கிணற்றில் ஆண் சடலம் மிதப்பதாக அப்பகுதி மக்கள் நாட்டறம்பள்ளி போலீஸாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனா். நாட்டறம்பள்ளி தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் கிணற்றில் இறந்த கிடந்தவரின் உடலை மீட்டு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். போலீஸாா் நடத்திய விசாரணையில் காணாமல் போன வெலகல்நத்தம் பகுதியை சோ்ந்த குமாா் என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் இறந்தவா் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

இதையடுத்து போலீஸாா் இறந்தவா் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com