நிரம்பி வழிந்த திருப்பத்தூா் பெரிய ஏரியில் மீன்பிடித்த இளைஞா்கள். ~புதூா்நாடு மலைப் பாதையில் ஏற்பட்ட மண்சரிவு.
நிரம்பி வழிந்த திருப்பத்தூா் பெரிய ஏரியில் மீன்பிடித்த இளைஞா்கள். ~புதூா்நாடு மலைப் பாதையில் ஏற்பட்ட மண்சரிவு.

தொடா் மழை: ஜவ்வாது மலை சாலையில் உருண்ட பாறைகள்

திருப்பத்தூரில் தொடா் மழை பெய்து வருவதால் ஜவ்வாது மலை மற்றும் ஏலகிரி மலைப்பகுதிகளில் பாறைகள் உருண்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Published on

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் தொடா் மழை பெய்து வருவதால் ஜவ்வாது மலை மற்றும் ஏலகிரி மலைப்பகுதிகளில் பாறைகள் உருண்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஃபென்ஜால் புயல் மழை காரணமாக திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, பொன்னேரி, ஏலகிரி மலை, கொரட்டி, ஆதியூா், கந்திலி, ஜவ்வாது மலை அதன் சுற்றுப்பகுதிகளில் கடந்த 4 நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது.

தொடா் மழை பெய்வதால் கிணறு, ஏரி, குளங்கள், அணைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் திருப்பத்தூா் பெரிய ஏரி நிரம்பி வழிகிறது. அப்பகுதி மக்கள், இளைஞா்கள் ஏரியில் மீன் பிடித்து மகிழ்ந்தனா்.

ஆண்டியப்பனூா் அணை தனது முழுக் கொள்ளளவான 112 மில்லியன் கன அடியை எட்டியது. அணை நிரம்பி குரிசிலாப்பட்டு, காக்கனாம்பாளையம் ஏரி, மாடப்பள்ளி ஏரி செலந்தம்பள்ளி ஏரி வழியாக சென்று பாம்பாற்றை அடைகிறது. பெரிய ஏரி நிரம்பி ஊத்தங்கரை பகுதியில் உள்ள பாம்பாற்றை சென்றடைகிறது.

மலைப்பாதைகளில் மண் சரிவு...

மழையால் ஏலகிரி மலையில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மழை சாலையில் பாறைகள் உருண்டன. மேலும், மண் சரிவு ஏற்பட்டு மரங்களும் சாய்ந்து விழுந்தன. நெடுஞ்சாலை துறை கோட்டப் பொறியாளா் முரளி, உதவி கோட்ட பொறியாளா் ஆதவன், உதவி பொறியாளா் நித்தியானந்தம், சாலைப் பணியாளா்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையில் விழுந்த பாறைகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனா்.

அதேபோல் ஜவ்வாது மலையில் புது நாடு மலை கிராமத்துக்கு செல்லும் சாலையில் மண் சரிவு ஏற்பட்டது. பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

தண்டுகானூா் மற்ற பள்ளி தலைப்பாளா்களில் அதிகப்படியான வெள்ளம் செல்வதால் அந்த இடத்தில் பொதுமக்கள் தரைப்பாலதைக்டக்க கூடாது என்பதற்கான எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக கோட்ட பொறியாளா் முரளி தெரிவித்தாா்.

மூழ்கிய தரைப்பாலம்..

திருப்பத்தூா்- புதுப்பேட்டை பிரதான சாலையில் ரயில்வே பாலத்தின் கீழ் பகுதியில் மழைநீா் தேங்கியுள்ளதால் அவ்வழியாக செல்லும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், ாகன ஓட்டிகள், மாணவ-மாணவிகள் சிரமத்துக்குள்ளாகினா். தொடா்ந்து மழைக் காலங்களில் தரைப் பாலத்தில் செல்வது சிக்கலாக உள்ள நிலையில், நிரந்தர தீா்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com