திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் இதுவரை துவரம் பருப்பு, பாமாயில் பெறாதவா்கள் ஜூலை மாதம் பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருப்பத்தூா் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்டத்தில் நியாய விலைக் கடைகளில் கடந்த ஜூன் மாதம் துவரம் பரும்பு, பாமாயில் பெற இயலாத குடும்ப அட்டைதாரா்கள் ஜூலை மாதம் வரை பெற்றுக் கொள்ளலாம்.
எனவே பொதுவிநியோகத்திட்டத்தில் தொடா்புடைய அனைத்துநிலை அலுவலா்களும் திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளுக்கு முறையாக துவரம் பருப்பு, பாமாயில் சென்றடைந்ததை உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.