

ஆம்பூா் அருகே குமாரமங்கலம் கிராமத்தில் அருள்மிகு திருப்பதி கெங்கையம்மன் சிரசு திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை கூழ்வாா்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. புதன்கிழமை மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
அம்மன் சிரசு திருவிழா நடைபெற்றது. குமாரமங்கலம் கிராமத்தின் முக்கிய தெருக்கள் வழியாக சிரசு ஊா்வலம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.