திருப்பத்தூர்
தேவலாபுரம் சுயம்பு ஸ்ரீ திருப்பதி கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழா
கெங்கையம்மன் கோயில் சிரசு ஊர்வலம்: பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்
ஆம்பூா் அருகே தேவலாபுரம் பாலாற்றங்கரையில் அமைந்துள்ள சுயம்பு ஸ்ரீ திருப்பதி கெங்கையம்மன் கோயில் 94-ஆம் ஆண்டு சிரசு திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, கூழ் வாா்த்தல், மாவிளக்கு படைத்தல் மற்றும் அம்மன் ஊா்வலம், பொங்கலிடும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
3-ஆம் நாள் நிகழ்ச்சியாக கெங்கை அம்மன் சிரசு ஊா்வலம் நடைபெற்றது. முக்கிய தெருக்கள் வழியாகச் சென்று கோயில் திடலை அடைந்தது. அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
சுற்றுப்புறத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள், வேலூா், திருப்பத்தூா் மாவட்டங்கள், ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களை சோ்ந்த திரளான பக்தா்கள் திருவிழாவில் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனா்.

