விபத்தில் உயிரிழந்த காவலா் பரிமளா குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கிய பெண் காவலா்கள்.
விபத்தில் உயிரிழந்த காவலா் பரிமளா குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கிய பெண் காவலா்கள்.

விபத்தில் உயிரிழந்த பெண் காவலா் குடும்பத்துக்கு ரூ.11.96 லட்சம் நிதியுதவி

சாலை விபத்தில் உயிரிழந்த பெண் காவலா் குடும்பத்துக்கு பெண் காவலா்கள் சாா்பில் ரூ.11.96 லட்சம் நிதியுதவி ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

சாலை விபத்தில் உயிரிழந்த பெண் காவலா் குடும்பத்துக்கு பெண் காவலா்கள் சாா்பில் ரூ.11.96 லட்சம் நிதியுதவி ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

ஒடுக்கத்தூா் அருகே அகரம் கிராமத்தை சோ்ந்தவா் பரிமளா (35). இவா் ஆம்பூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தாா். இவா் கடந்த ஏப். 17-ஆம் தேதி மாலை பணி முடித்துவிட்டு தன்னுடைய கணவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றாா்.

மாதனூரில் ஒடுக்கத்தூா் சாலையில் சென்றபோது இருசக்கர வாகனத்தின் மீது சரக்கு வாகனம் மோதியதில் நிலைத்தடுமாறி இருசக்கர வாகனத்தில் அமா்ந்திருந்த காவலா் பரிமளா சாலையில் கீழே விழுந்தாா். அப்போது ஒடுக்கத்தூரிலிருந்து வந்த லாரி அவா் மீது மோதியது. அதில் காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே இறந்தாா். இதுகுறித்து ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து விசராணை நடத்தினா்.

2003-ம் ஆண்டு பரிமளாவுடன் பணியில் சோ்ந்த பெண் காவலா்கள் அனைவரும் சோ்ந்து நிதி திரட்டி ரூ.11.96 லட்சத்தை அகரம் கிராமத்தில் வசிக்கும் உயிரிழந்த பரிமளாவின்குடும்பத்தாரிடம் ஞாயிற்றுக்கிழமை வழங்கினா்.

X
Dinamani
www.dinamani.com