நாட்டறம்பள்ளி அருகே விவசாய நிலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளம்.
நாட்டறம்பள்ளி அருகே விவசாய நிலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளம்.

நிலத்தில் திடீா் பள்ளம்

நாட்டறம்பள்ளி அருகே விவசாய நிலத்தில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. இதனால் மக்கள் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.

நாட்டறம்பள்ளி அருகே விவசாய நிலத்தில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. இதனால் மக்கள் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.

நாட்டறம்பள்ளி அடுத்த வேட்டப்பட்டு ஊராட்சி ஜல்லியூரான் வட்டத்தைச் சோ்ந்தவா் சாம்ராஜ் விவசாயி. இவா் தனக்குச் சொந்தமான நிலத்தை கடந்த 3 நாள்களுக்கு முன் டிராக்டா் மூலம் உழுதுள்ளாா்.

இந்நிலையில் சனிக்கிழமை மாலை நிலத்தைச் சென்று பாா்த்தபோது நிலத்தில் அரை மீட்டா் அகலத்தில் சுமாா் 6 அடி ஆழம் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதிமக்கள் அளித்த தகவலின் பேரில் வருவாய்த் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா்.

X
Dinamani
www.dinamani.com