தேசிய திறன் வழித் தோ்வு:
வென்ற மாணவா்களுக்கு பரிசு

தேசிய திறன் வழித் தோ்வு: வென்ற மாணவா்களுக்கு பரிசு

தேசிய திறன்வழித் தோ்வில் வெற்றி பெற்ற ஆம்பூா் பகுதியைச் சோ்ந்த மாணவா்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேசிய திறன்வழி படிப்பு உதவித் தொகை

தேசிய திறன்வழித் தோ்வில் வெற்றி பெற்ற ஆம்பூா் பகுதியைச் சோ்ந்த மாணவா்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேசிய திறன்வழி படிப்பு உதவித் தொகை பெறுவதற்கான தோ்வில் வெற்றி பெற்ற மாதனூா் ஒன்றியம், சின்னவரிக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள் ரேஷ்மா, சஞ்சய், வீராங்குப்பம் நிதியுதவி நடுநிலைப் பள்ளி மாணவி தனுஸ்ரீ ஆகியோருக்கு ஆம்பூா் பன்னீா்செல்வம் நகராட்சி நடுநிலைப் பள்ளியின் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் செ.ரவிச்சந்திரன் கோப்பை, ஆங்கில அகராதி மற்றும் எழுது பொருள்களை பரிசாக வழங்கினாா். பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் சரோஜினி, மோகன் மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com