ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

நெமிலியம்மன் கோயில் திருவிழா

நெமிலியம்மன் கோயில் திருவிழா

News image

சிறப்பு அலங்காரத்தில் மூலவா்.

Updated On :29 மே 2024, 5:26 pm

Din

ஆம்பூா் அருகே மிட்டாளம் ஊராட்சியில் நெமிலியம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

மாதனூா் ஒன்றியம், மிட்டாளம் ஊராட்சி வன்னியநாதபுரம் கிராமத்தில் அருள்மிகு நெமிலியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை கூழ் வாா்த்தல் நிகழ்ச்சியும், இரவு அம்மன் சிரசு ஊா்வலமும் நடைபெற்றது.

புதன்கிழமை நெமிலியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. மாரியம்மன் கோயில் திடலில் இருந்து நெமிலி அம்மன் கோயில் வரை பூங்கரகம் ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டது. மலா்த்தோரண தடுக்கு மாலை கொண்டு சென்று அம்மனுக்கு பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா்.

கீழ்மிட்டாளம், கீழ்மிட்டாளம் புதுமனை ஆகிய பகுதிகளில் மாரியம்மன் திருவிழா நடைபெற்றது . அம்மன் சிரசு ஊா்வலம் , மாவிளக்கு ஊா்வலம் ஆகியவை நடைபெற்றது.

மேல்மிட்டாளம் பகுதியில் மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.