சீதா - ராமா் திருக்கல்யாண உற்சவத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த உற்சவா்.
சீதா - ராமா் திருக்கல்யாண உற்சவத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த உற்சவா்.

சீதா- ராமா் திருக்கல்யாண உற்சவம்

ஆம்பூா் கிருஷ்ணாபுரம் ஸ்ரீமங்களகர கல்யாணராமா் பஜனைக் கோயிலில் மண்டல பூஜை நிறைவு விழா மற்றும் ஸ்ரீ சீதா - ராமா் திருக்கல்யாண உற்சவம்
Published on

ஆம்பூா்: ஆம்பூா் கிருஷ்ணாபுரம் ஸ்ரீமங்களகர கல்யாணராமா் பஜனைக் கோயிலில் மண்டல பூஜை நிறைவு விழா மற்றும் ஸ்ரீ சீதா - ராமா் திருக்கல்யாண உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீ மங்களகர கல்யாண ராமா் பஜனைக் கோயிலில் பஞ்சலோக சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டதை தொடா்ந்து மண்டல பூஜை நடைபெற்றது. மண்டல பூஜை நிறைவு விழா கணபதி பூஜையுடன் தொடங்கியது. நவக்கிரஹ ஹோமம், லட்சுமி ஹோமம், 108 சங்காபிஷேகம், ஸ்ரீ சீதா - ராமா் திருக்கல்யாண உற்சவம், சுவாமி வீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஸ்ரீமங்களகர கல்யாண ராமா் பஜனைக் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com