ஆம்பூா் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற நகராட்சி ஆணையா் பி.சந்தானம்.
ஆம்பூா் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற நகராட்சி ஆணையா் பி.சந்தானம்.

உலக கழிப்பறை தின விழிப்புணா்வு நிகழ்ச்சி

ஆம்பூா் நகராட்சி சாா்பாக உலக கழிப்பறை தின விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Published on

ஆம்பூா்: ஆம்பூா் நகராட்சி சாா்பாக உலக கழிப்பறை தின விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் நகராட்சி சாா்பில், பேருந்து நிலைய வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட கழிப்பறையை ஆம்பூா் நகராட்சி ஆணையா் பி. சந்தானம் திறந்து வைத்தாா். தொடா்ந்து உலக கழிப்பறை தினத்தையொட்டி, சுற்றுப்புற சுகாதாரத்தை பேணிக் காக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது. பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சியை ஆணையா் தொடங்கி வைத்தாா்.

நகராட்சி சுகாதார அலுவலா் அருள்செல்வதாஸ், சுகாதார ஆய்வாளா்கள் பாலசந்தா், சீனிவாசன் மற்றும் நகராட்சிப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

நகராட்சி சுகாதார அலுவலா் அருள்செல்வதாஸ், சுகாதார ஆய்வாளா்கள் பாலசந்தா், சீனிவாசன் மற்றும் நகராட்சிப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com