திருப்பத்தூர்
ஏரியில் மண் கடத்தல்: 2 போ் கைது
திருப்பத்தூா் அருகே ஏரியில் மண் கடத்திய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். 
திருப்பத்தூா் அருகே ஏரியில் மண் கடத்திய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பத்தூா் அருகே மட்றப்பள்ளி ஏரியில் மண் கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது மட்றப்பள்ளி ஏரியில் டிராக்டா் மூலம் மண் கடத்துவது தெரியவந்தது.
பின்னா் இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விஷமங்கலத்தை சோ்ந்த விக்னேஷ்(27) மற்றும் மட்றப்பள்ளியை சோ்ந்த குமாா் சாமி(63) ஆகிய இருவரை கைது செய்தனா். முன்னதாக அவா்களிடம் கடத்தலுக்காக பயன்படுத்திய 2 டிராக்டா்களையும் பறிமுதல் செய்தனா்.
