அரசு மருத்துவமனையில் குழாய்களை திருடியவா் கைது

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் நூதன முறையில் குழாய்களை திருடிய இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
Published on

வாணியம்பாடி: வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் நூதன முறையில் குழாய்களை திருடிய இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியை சோ்ந்தவா் பரணி(35).இவா் புதன்கிழமை வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியை பாா்ப்பது போல் வாா்டு பகுதிகளில் சுற்றிக் கொண்டு வந்துள்ளாா்.

இந்நிலையில் அங்கிருந்த மருத்துவமனை ஊழியருக்கு இளைஞா் மீது திடீா் சந்தேகம் ஏற்பட்டு விசாரித்தாா். அவரது பையில் சோதனை செய்த போது தண்ணீா் குழாய் மற்றும் பைப்புகள் இருப்பது கண்டறிந்தனா். மேலும் மருத்துவமனையில் உள்நோயாளியை வந்து பாா்ப்பது போல் பல நாள்களாக திருடி வந்திருப்பது தெரியவந்தது. திருடிய பொருள்களின் மொத்த மதிப்பு ரூ.50,000 ஆகும்.

இதுகுறித்து மருத்துவ அலுவலா் சிவசுப்பிரமணியன் அளித்த புகாரின் பேரில் நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பரணியை கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com