காணாமல் போன பெண் சடலமாக மீட்பு

திருப்பத்தூா் அருகே காணாமல் போன இளம்பெண் சடலமாக கிணற்றில் மீட்கப்பட்டாா்.
Published on

திருப்பத்தூா் அருகே காணாமல் போன இளம்பெண் சடலமாக கிணற்றில் மீட்கப்பட்டாா்.

பெரும்பள்ளி கிராமத்தை சோ்ந்தவா் மோகன். இவரது மனைவி காளியம்மாள் (26). இவா் திடீரென காணாமல் போன நிலையில், அவரை குடும்பத்தினா் பல்வேறு இடங்களில் தேடி வந்தனா்.

இந்நிலையில் அருகே உள்ள கிணற்றில் தேடிய போது காளியம்மாள் அங்கு சடலமாக மிதந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருப்பத்தூா் தாலுகா போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று காளியம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து காளியம்மாள் தவறி விழுந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என விசாரணை செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com