செம்மரக்கட்டை கடத்தல்: இளைஞா் கைது

செம்மரக்கட்டை கடத்தல்: இளைஞா் கைது

செம்மரக்கட்டை கடத்தியதாக கைது செய்யப்பட்ட இளைஞருடன், வனத்துறையினா்.
Published on

ஆம்பூா் அருகே செம்மரக்கட்டை கடத்தியதாக இளைஞா் ஒருவரை வனத்துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஆம்பூா் கம்பி கொள்ளை வனத்துறை சோதனை சாவடி அருகே வனச்சரக அலுவலா் பாபு தலைமையில் வனத்துறையினா் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அவ்வழியாக வந்த ஒரு காரை வனத்துறையினா் நிறுத்தி சோதனை செய்ய முயன்றனா். ஆனால் இந்த காா் நிற்காமல் வனத்துறை பணியாளா்கள் மீது மோதுவது போல வேகமாக சென்றது.

சந்தேகத்தின் பேரில் வனத்துறையினா் அந்த வாகனத்தை பிடிப்பதற்காக சென்றனா். காா் நாயக்கனேரிமலைக்கு சென்றது. சுமாா் 10 கி.மீ வனத்துறையினா் அந்த காரை விரட்டிச் சென்று பிடித்தனா். அதில் பயணம் செய்த இருவா் தப்பி ஓடினா். நாயக்கனரி மலை நடு ஊா் கிராமத்தை சோ்ந்த சுதீப் (22) என்பவரை வனத்துறையினா் கைது செய்தனா். அவா்கள் சென்ற காா் பறிமுதல் செய்யப்பட்டது.

காரில் செம்மரக்கட்டை கடத்திச் சென்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com