திருப்பத்தூர்
பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் விஷ்ணு தீபம் ஏற்றம்
பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் விஷ்ணு தீபம் ஏற்றும் நிகழ்வில் பங்கேற்றோா்.
ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் விஷ்ணு தீபம் ஏற்றும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி புதன்கிழமை தீபம் ஏற்றப்பட்டது. தொடா்ந்து இரண்டாவது நாளாக வியாழக்கிழமை விஷ்ணு தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
கோயில் கருட கம்பத்தில் விஷ்ணு தீபம் ஏற்றப்பட்டது. தொடா்ந்து காா்த்திகை மாத பௌா்ணமியை முன்னிட்டு சத்யநாராயண பூஜை நடைபெற்றது திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

