அரசு பள்ளி மாணவிக்கு மிதிவண்டி வழங்கிய எம்எல்ஏ அ.செ. வில்வநாதன்.
திருப்பத்தூர்
மாணவா்களுக்கு மிதிவண்டி அளிப்பு
அரசு பள்ளி மாணவிக்கு மிதிவண்டி வழங்கிய எம்எல்ஏ அ.செ. வில்வநாதன்.
வடச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
தலைமை ஆசிரியை சாந்தகுமாரி வரவேற்றாா். ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 146 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினாா்.
விவேகானந்தா அறக்கட்டளை நிா்வாகி பாலசுப்பிரமணியன், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் சாவித்ரி கிருஷ்ணன், ராஜேந்திரன், காயத்ரி துளசிராமன், திமுக மாவட்ட விவசாய தொழிலாளா் அணி அமைப்பாளா் மு. பழனி, மாதனூா் மேற்கு ஒன்றிய துணைச் செயலா் சா. சங்கா், மாவட்ட பிரதிநிதி காசி, பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் அரங்கநாதன் கலந்து கொண்டனா்.

