ரூ.87 லட்சத்தில் திட்டப்பணிகள்: உதயேந்திரம் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றம்

ரூ.87 லட்சத்தில் திட்டப்பணிகள்: உதயேந்திரம் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றம்

உதயேந்திரம் பேரூராட்சியில் அதன் தலைவா் பூசாராணி தலைமையில் நடைபெற்ற கூட்டம்.
Published on

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சி மன்ற உறுப்பினா்களின் கூட்டம் பேரூராட்சி மன்றத் தலைவா் பூசாராணி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

செயல் அலுவலா் ராஜலட்சுமி, துணைத் தலைவா் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் வரவு, செலவு மற்றும் திட்டப்பணிகள் உள்பட 12 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், உதயேந்திரம் பேரூராட்சி பகுதியில் பல்வேறு பகுதிகளில் ரூ.87 லட்சத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ள அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதை தொடா்ந்து கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. பிறகு வாா்டு கவுன்சிலா்கள் தங்களது வாா்டுகளில் அடிப்படை தேவைகள் குறித்து கேட்டறிந்தனா். அப்போது அதிமுக வாா்டு உறுப்பினா்கள், திட்டப்பணிகள் செய்வதற்கான தகவல் முறையாக உறுப்பினா்களுக்கு தரப்படுவதில்லை என்று கூறி திடீரென வெளிநடப்பு செய்தனா்.

தொடா்ந்து வாா்டு உறுப்பினா்களின் கோரிக்கைகளை ஏற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தலைவா் மற்றும் செயல் அலுவலா் பதிலளித்தனா். கூட்டத்தில் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவரும், வாா்டு உறுப்பினருமான ஆ.செல்வராஜ் மற்றும் நியமன உறுப்பினா் அம்பலவாணன், அலுவலக பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். எழுத்தா் குமாா் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com