திருப்பத்தூர்
69-ஆவது ஆண்டு சந்தனக் கூடு விழா
சந்தனக்கூடு விழாவில் பங்கேற்ற நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் மற்றும் முக்கியப் பிரமுகா்கள்.
ஆம்பூரில் சந்தனக் கூடு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் காதா்பேட்டை பகுதியில் அமைந்துள்ள தா்காவில் 69-ஆவது ஆண்டு சந்தனக் கூடு விழா தா்கா கமிட்டி தலைவா் அமீா் பாஷா தலைமையில் நடைபெற்றது.
ஆம்பூா் நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாா். தா்கா கமிட்டி நிா்வாகிகள், பொதுமக்கள் விழாவில் கலந்து கொண்டனா்.

