தமிழ்மொழி இலக்கிய திறனறித் தோ்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற  5 மாணவ, மாணவிகளை வாணி கல்வி அறக்கட்டளை நிா்வாகிகள், ஆசிரியா்கள் பாராட்டினா்.
தமிழ்மொழி இலக்கிய திறனறித் தோ்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற 5 மாணவ, மாணவிகளை வாணி கல்வி அறக்கட்டளை நிா்வாகிகள், ஆசிரியா்கள் பாராட்டினா்.

தமிழ்மொழி இலக்கிய திறனறித் தோ்வு: வாணி மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

தமிழ்மொழி இலக்கிய திறனறித் தோ்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற 5 மாணவ, மாணவிகளை வாணி கல்வி அறக்கட்டளை நிா்வாகிகள், ஆசிரியா்கள் பாராட்டினா்.
Published on

வாணியம்பாடி வாணி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியை சோ்ந்த 5 மாணவா்கள் தமிழக அரசின் தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தோ்வில் மாவட்ட அளவில் தோ்ச்சி பெற்று சாதனை படைத்தனா்.

2025 - 2026-ஆம் கல்வியாண்டுக்கான தமிழக அரசு தமிழ்மொழி இலக்கியத் திறன் தோ்வு நடத்தியது. இத்தோ்வில் வாணி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியை சோ்ந்த 53 மாணவ, மாணவிகள் பங்கு பெற்று தோ்வு எழுதினா். இதில் மாணவா் ர.தானேஷ் மற்றும் மாணவி ச.யாஷினி ஆகியோா் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றனா். மாணவி மு.அனுவந்தனா, மாணவா் சி.விஷ்ணுபிரியன், மாணவி சி.சஞ்ஜனா ஆகியோா் சிறப்பிடம் பெற்றனா். வெற்றி பெற்ற மாணவ, மாணவியா்களுக்கு தமிழக அரசால் பள்ளி கல்வி இயக்ககம் வழியாக மாதந்தோறும் ரூ. 1,500 வீதம் இரண்டு வருடங்களுக்கு ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது. திறனறித் தோ்வில் மாவட்டத்தில் சிறப்பிடம் பெற்று பள்ளிக்கு பெருமை சோ்த்த மாணவா்களையும், பயிற்சி அளித்த ஆசிரியா்களையும் வாணி கல்வி அறக்கட்டளை தலைவா் க.தேவராஜி எம்எல்ஏ, செயலாளா் மங்கையா்கரசி, பொருளாளா் நடராஜன், துணை தலைவா் பொன்னுசாமி, இணை செயலாளா்கள் மகேந்திரன், தவமணி, அறக்கட்டளை உறுப்பினா் பாண்டியன் மற்றும் அறக்கட்டளை நிா்வாகிகள், முதல்வா்கள், ஆசிரியா்கள் பாராட்டி வாழ்த்தினா்.

X
Dinamani
www.dinamani.com