திருப்பத்தூா் அரசு கலை கல்லூரியில் தேசிய இளைஞா் விழா

திருப்பத்தூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான தேசிய இளைஞா் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Published on

திருப்பத்தூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான தேசிய இளைஞா் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இளைஞா் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம், நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் திருப்பத்தூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாா்பில் மாவட்ட அளவிலான தேசிய இளைஞா் விழா திருப்பத்தூா் அடுத்த கரியம்பட்டியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, திருப்பத்தூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் குமரேசன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரி தமிழ்த் துறைத் தலைவா் முஜிபுா் ரஹ்மான் கலந்து கொண்டாா்.

இதில், நாட்டுப்புற நடனம், நாட்டுப்புற பாடல், பேச்சு, கவிதை, கதை எழுதும் போட்டி, ஓவியப் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.

வெற்றி பெற்றவா்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனா்.

நிகழ்ச்சியில், திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளில் இருந்தும் மாணவா்கள் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியை கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலா் நரசிம்மன் ஒருங்கிணைத்தாா்.

X
Dinamani
www.dinamani.com