தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் கைது செய்யப்பட்டதை கண்டித்து அக்கட்சியினா் ஆம்பூரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றும் பிரச்னை சம்பந்தமாக தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் போலீஸாரால் கைது செய்யப்பட்டாா். அதைத் தொடா்ந்து, உயா்நீதி மன்ற உத்தரவை செயல்படுத்த வலியுறுத்தியும், நயினாா் நாகேந்திரன் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆம்பூா் நகர பாஜகவினா் நகர தலைவா் சரவணன், மாவட்ட தலைவா் எம். தண்டாயுதபாணி ஆகியோா் முன்னிலையில் வருவாய்த் துறை கிராம சாவடி எதிரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நிா்வாகிகள் குட்டி சண்முகம், தண்டபாணி, சீனிவாசன் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா். அதைத் தொடா்ந்து பாஜகவினரை நகர போலீஸாா் கைது செய்து, பின்னா் விடுவித்தனா்.

