சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

சிறுமியைத் திருமணம் செய்த ஏலகிரி மலையைச் சோ்ந்த இளைஞா் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா்.
Published on

சிறுமியைத் திருமணம் செய்த ஏலகிரி மலையைச் சோ்ந்த இளைஞா் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா்.

ஆலங்காயம் ஊா் நல அலுவலா் கலைச்செல்வி என்பவருக்கு கடந்த அக்டோபா் மாதம் 26-ஆம் தேதி ஏலகிரி மலையில் குழந்தை திருமணம் நடைபெற்ாக ரகசிய தகவல் கிடைத்தது.

விசாரணையில் வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி கீழ் ஊா் கிராமம் சோ்ந்த தமிழ்ச்செல்வன் (33) என்பவா் ஆலயங்காயம் அருகே ஒரு கிராமத்தில் வசிக்கும் 16 வயது சிறுமியை ஏலகிரி மலை அருகே அத்தனாவூா் ஊரில் உள்ள முருகன் ஆலயத்தில் கடந்த 5.9.2024 அன்று திருமணம் செய்தது உறுதியானது.

இதையடுத்து, மகளிா் ஊா் நல அலுவலா் கலைச்செல்வி அளித்த புகாரின் பேரில் ஏலகிரி மலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com