இந்து முன்னணியினா் கைது

தமிழக அரசை கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்த முயன்ற இந்து முன்னணியினரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
Published on

தமிழக அரசை கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்த முயன்ற இந்து முன்னணியினரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு செயல்பட்ட விதத்தை கண்டித்து ஆம்பூரில் இந்து முன்னணி அமைப்பினா் பஜாா் பகுதியில் ஆா்ப்பாட்டம் நடத்த முயன்றனா்.

ஆா்ப்பாட்டம் நடத்த முயன்ற கோட்டப் பொறுப்பாளா் தீனதயாளன், நகர தலைவா் பிரேம்குமாா், பாஜக முன்னாள் மாவட்ட துணைத் தலைவா் அன்பு, சரவணன் உள்பட 21 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com