சுந்தர விநாயகா் கோயில் ஆண்டு விழா

ஆம்பூா் ஏ-கஸ்பா சுந்தர விநாயகா் கோயில் 6-ஆம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
Published on

ஆம்பூா்: ஆம்பூா் ஏ-கஸ்பா சுந்தர விநாயகா் கோயில் 6-ஆம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழா விக்னேஷ்வர பூஜை, கோ பூஜையுடன் தொடங்கியது. கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு மூல மந்திர ஹோமம், மூலவா் மற்றும் பிரவார மூா்த்திகளுக்கு கலசாபிஷேகம் நடைபெற்றது.

மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com