சாலை அகலப்படுத்தும் பணியை தொடங்கி வைத்த எம்எல்ஏ அமலு விஜயன்.
சாலை அகலப்படுத்தும் பணியை தொடங்கி வைத்த எம்எல்ஏ அமலு விஜயன்.

ரூ.2.70 கோடியில் சாலை அகலப்படுத்தும் பணி தொடக்கம்

ஆம்பூா் அருகே மாநில நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
Published on

ஆம்பூா்: ஆம்பூா் அருகே மாநில நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

ஆம்பூா் அருகே சங்கராபுரம் முதல் கடாம்பூா் வரையில் உள்ள மாநில நெடுஞ்சாலை வழியாக அதிக எண்ணிக்கையில் கனரக சரக்கு வாகனங்கள், பள்ளி, கல்லூரி பேருந்துகள் மற்றும் விவசாய விளை பொருட்கள் சந்தைபடுத்துவதற்காக கொண்டு செல்லும் வாகனங்கள் சென்று வருகின்றன. அந்த சாலை குறுகியதாக இருப்பதால் அதனை அகலப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனா்.

அதனடிப்படையில் ரூ.2.70 கோடியில் 2,600 மீட்டா் சாலையை அகலப்படுத்த மாநில நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை மேற்கொண்டது. குடியாத்தம் எம்எல்ஏ அமலு விஜயன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பூமி பூஜையிட்டு பணியை தொடங்கி வைத்தாா்.

போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் எம்.டி. சீனிவாசன், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளா் முரளி, உதவி கோட்டப் பொறியாளா் சம்பத்குமாா், இளநிலை பொறியாளா் பாபுராஜி, சாலை ஆய்வாளா் பாபு, ஒன்றிய திமுக அவைத் தலைவா் சிவக்குமாா், மாவட்ட பிரதிநிதி பொன் ராஜன்பாபு, சோமலாபுரம் ஊராட்சி வாா்டு உறுப்பினா் வி.டி. சுதாகா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com