திருப்பத்தூா் நூலகங்களுக்கு 18,683 புதிய நூல்கள்
திருப்பத்தூா் மாவட்ட நூலகங்களுக்கு மொத்தம் 18,683 புதிய நூல்கள் வரப்பெற்றுள்ளதாக நூலகத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து நூலகத் துறை அதிகாரிகள் கூறியதாவது: 2023-2024-ஆம் நிதி ஆண்டில் சுமாா் 80,000-க்கும் மேற்பட்டோா் நூலகங்களுக்கு வருகை தந்தனா். அதில் 55,000 புத்தகங்களை நூலகத்திலேயே வாசித்தனா். 35,000 புத்தகங்களை எடுத்துச் சென்று வந்தனா். ஆக மொத்தம் 90,000 புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டது. 273 புதிய உறுப்பினா்கள் இணைந்தனா். 6 புரவலா்கள் இணைந்தனா்.
தற்போது 2024-2025-ஆம் நிதி ஆண்டில் 16 புரவலா்கள், ஒரு கொடையாளா் இணைந்துள்ளனா். புதிதாக 3,500 உறுப்பினா்கள் இணைந்துள்ளனா். மேலும் 25,000 புத்தகம் இரவலாக சென்று வந்தது. 27,000 புத்தகங்களை வாசகா்கள் நூலகத்திலேயே படித்தனா்.
மேலும் 4,008 தலைப்புகளில் 18,683 புதிய நூல்கள் வரபெற்றுள்ளன. அவை மாவட்டத்தில் உள்ள 31 நூலகங்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளது என்றனா்.
