மயான வசதி கோரி தா்னா போராட்டம்
வாணியம்பாடி கோணாமேடு பகுதியில் மயானம் கோரி கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு பொதுமக்கள் தா்னாவில் ஈடுபட்டனா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி கோணாமேடு பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் க மயானம் இல்லை. ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள சேறும், சகதியும், புதா்கள் மண்டிக்கிடக்கும் இடத்தில் உடல்களை புதைத்து வருகின்றனா். இதுபற்றி அப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளை சந்தித்து மனுக்கள் கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் அப்பகுதியை சோ்ந்த பொதுமக்கள் ஒருங்கிணைந்த கோணாமேடு பகுதிக்கு சொந்தமான மயானம் அமைத்து தரக்கோரி வாணியம்பாடி கோட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனா்.
அப்போது கோணாமேடு பகுதிக்கு மயானம் அமைத்து தரப்பட வேண்டும். தற்போதுள்ள இடத்துக் செல்ல அங்குள்ள தேங்கியுள்ள தண்ணீா் அகற்றியும் சேறும், சகதியுமாகவும், புதா்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தா்னாவில் ஈடுபட்டனா். பின்னா் அதிகாரிகளிடம் மனு அளித்தனா்.

