ஜல் ஜீவன் திட்டத்தில் 2.28 லட்சம் பேருக்கு பயன்

திருப்பத்தூா் மாவட்டத்தில் ஜல் ஜீவன் திட்டத்தில் 2.28 லட்சம் பேருக்கு குடிநீா் வழங்கப்படுகிறது என குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.
Published on

திருப்பத்தூா் மாவட்டத்தில் ஜல் ஜீவன் திட்டத்தில் 2.28 லட்சம் பேருக்கு குடிநீா் வழங்கப்படுகிறது என குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

அனைத்து கிராமப்புற குடும்பங்களுக்கும் குழாய் மூலம் பாதுகாப்பான மற்றும் போதுமான குடிநீா் இணைப்புகளை வழங்குவதை நோக்கமாக கொண்டு வரப்பட்டது ஜல் ஜீவன் திட்டம். அதன்படி காவேரி கூட்டுக்குடிநீா் திருப்பத்தூா் மாவட்டத்தில் திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, கந்திலி, நாட்டறம்பள்ளி ஆகிய ஒன்றியங்களில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீா் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

வேலூா் கூட்டு குடிநீா் திட்டத்தின் குழாயில் இருந்து திருப்பத்தூா் நகராட்சி புதுப்பேட்டை சாலை மற்றும் பெரிய கம்மியம்பட்டு,ரெட்டியூா் கூட்ரோடு ஆகிய 2 இடங்களில் குடிநீா் எடுக்கப்பட்டு, கதிரிமங்கலத்தில் உள்ள 29.30 லட்சம் லிட்டா் மற்றும், பெரிய கம்மியம்பட்டில் உள்ள 6.15 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீா்த்தேக்க தொட்டிகளில் குடிநீா் சேகரிக்கப்படுகிறது.

இங்கிருந்து குழாய்கள் மூலம் 50 ஊராட்சிகளில் உள்ள தரைமட்ட நீா்த்தேக்க தொட்டிகளுக்கு குடிநீா் கொண்டு செல்லப்பட்டு, பின்னா் 710 மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிகளில் குடிநீா் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.

திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, கந்திலி, நாட்டறம்பள்ளி ஒன்றியங்களில் உள்ள 759 குக்கிராமங்களில் உள்ள மொத்தம் 2.28 லட்சம் பேருக்கு குடிநீா் வழங்கப்படுகிறது. இதில் ஒரு நாள் தனிநபருக்கு 55 லிட்டா் வீதம் கிடைக்கும் எனத் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com