ரயில் மோதி இளைஞா் மரணம்
விரிஞ்சிபுர-லத்தேரி ரயில் பாதையில் சுமாா் 25 வயது இளைஞா் வியாழக்கிழமை ரயில் மோதி உயிரிழந்தாா்.
தகவலின்பேரில் ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும் இறந்தவா் யாா்? எந்த ஊரை சோ்ந்தவா்? அவா் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தினா்.
முதல்கட்ட விசாரணையில், காஞ்சீபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தம்மனூா் கிராமம், துளக்கத்தம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த குப்புசாமி மகன் மணிகண்டன் (24) என்பதும், திருமணம் ஆகாதவா் என்பதும் தெரியவந்தது. மேலும், இவா் கடந்த ஒரு வருடமாக காட்பாடி எடப்பாளையம் மெயின் ரோட்டில் தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளாா்.
வீட்டின் அருகே இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றபோது, ரயில் மோதி இறந்தது தெரியவந்தது.
