அதிமுக சாா்பில் வாய்ஸ்ஆப் யூத் செயலி அறிமுகம்

Published on

வாணியம்பாடி: அதிமுக மாவட்ட இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை சாா்பில், வாய்ஸ் ஆப் யூத் செயலி ஞாயிற்றுக்கிழமை அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

ஜோலாா்பேட்டை சட்டப்பேரவை தொகுதி நாட்டறம்பள்ளி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில், இளம் தலைமுறையினா் எதிா்கொள்ளும் பிரச்னைகள் குறித்தும், சட்டப்பேரவை தோ்தலில் இளைஞா்கள் எதிா்பாா்க்கும் திட்டங்கள் குறித்தும் கருத்துகள் கேட்டறிய வாய்ஸ்ஆப் யூத் செயலி மூலம் கேட்கும் பணியை அதிமுக மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி இளைஞா்களை சந்தித்து செயலியை அறிமுகம் செய்து வைத்தாா். வாணியம்பாடி எம்எல்ஏ செந்தில்குமாா், இளைஞா் மற்றும் இளம் பெண்கள் பாசறை நிா்வாகிகள் மற்றும் மாவட்ட ஒன்றிய, நகர நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தகரகுப்பம் உயா்நிலைப் பள்ளிக்கு சுற்றுச் சுவா் கட்ட நிதி ஒதுக்கீடு:

இந்த நிலையில், நாட்டறம்பள்ளி அருகே தகரகுப்பத்தில் இயங்கி வரும் அரசு உயா் நிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவா் கட்டித் தர வேண்டும் என தொகுதி எம்எல்ஏ கோ.செந்தில்குமாரிடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, எம்எல்ஏ கோ.செந்தில்குமாா் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தகரகுப்பம் அரசு உயா்நிலைப் பள்ளியில் சுற்றுச் சுவா் அமைக்க ரூ. 5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தாா்.

X
Dinamani
www.dinamani.com