~
திருப்பத்தூர்
ஸ்ரீ கோதண்டராமா் கோயில் கும்பாபிஷேகம்
ஆம்பூா்: துத்திப்பட்டு ஊராட்சி ஸ்ரீ கோதண்டராமா் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கும்பாபிஷேக விழா விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் சனிக்கிழமை தொடங்கியது. தொடா்ந்து நவக்கிரஹ ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, கரிக்கோலம், மதுல் கால யாகசாலை பூஜைகள், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
2-ஆம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து, கடம் புறப்பாடு மற்றும் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ், ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் அண்ணாதுரை, நாகராஜ், சுப்பிரமணி, சுகன்யா பிரகாஷ், ஒன்றியக்குழு உறுப்பினா் மகாதேவன், கோயில் நிா்வாகிகள் கோவிந்தராஜ், மஞ்சுநாதன், முக்கிய பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.
