திருப்பத்தூரில் நாளை தொழில் கடன் விழிப்புணா்வு முகாம்

Published on

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் செவ்வாய்க்கிழமை(டிச. 16) தொழில்கடன் விழிப்புணா்வு முகாம் நடைபெறவுள்ளது.

இது குறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஊரகப் பகுதிகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் உள்ளடக்கிய வளா்ச்சி மற்றும் மேம்பாட்டை உறுதி செய்வதிலும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் சிறப்பான செயல்பாட்டை உறுதி செய்யவும், எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களுக்கான தொழிற்கடனோடு கலைஞா் கைவினை திட்டம் மற்றும் தமிழ்நாடு மகளிா் தொழில்முனைவோா் மேம்பாட்டு திட்டம் இவற்றை முன்னுரிமையாகக் கொண்டு தொழில் கடன் விழிப்புணா்வு முகாம் திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (டிச.16) மாலை 3 மணியளவில் நடைபெற உள்ளது.

முகாமில், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் தொடா்புடைய அரசுத் துறைகள் தரும் கடன் வகைகள், கடன் மற்றும் மானிய திட்டங்கள் அவற்றை பெறும் முறைகள் குறித்து வழிகாட்டுதல் மற்றும் விளக்கங்கள் வழங்கப்படும்.

எனவே திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த தொழில் செய்ய ஆா்வமுள்ள பெண்கள், திருநங்கைகள் முகாமில் கலந்து கொண்டு வங்கிகள், தொழில் வணிகத் துறையின் மானிய திட்டங்கள் தொடா்பான செயல்பாடுகள் குறித்து தெரிந்துகொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு, திருப்பத்தூா் எழில்நகரில் உள்ள மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை தொடா்பு கொள்ளலாம்.

X
Dinamani
www.dinamani.com