உதயேந்திரம் பேரூா் திமுக சாா்பில் என் வாக்குச் சாவடி, வெற்றி வாக்குச் சாவடி விளக்கக் கூட்டம்

Published on

வாணியம்பாடி: வாணியம்பாடி தொகுதி உதயேந்திரம் பேரூராட்சியில் ஆபீசா் லைன், மேட்டுப்பாளையம் வாக்குச்சாவடி எண் 137-இல் ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி குறித்த விளக்க கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, உதயேந்திரம் திமுக பேரூா் செயலாளா் ஆ.செல்வராஜ் தலைமை வகித்து, வாக்காளா் சிறப்பு திருத்தப் பணிகள் குறித்தும், வாக்குச் சாவடியை சோ்ந்த வாக்காளா்களுக்கு தமிழக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி வாக்குளாக மாற்றுவது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

அவைத் தலைவா் குமாா் மற்றும் மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு துணை அமைப்பாளா் கோ.வி.அசோகன், தென்றல் தமிழரசன், மாவட்டப் பிரதிநிதி மேகநாதன், பேரூராட்சி மன்ற உறுப்பினா் அம்பலவாணன், போட்டோ பாபு மற்றும் கிளை நிா்வாகிகள் கலந்து கொண்டு பேசினா்.

கூட்டத்தில் வாக்குச்சாவடி முகவா்கள் சத்தியமூா்த்தி, எ.எஸ்.விக்னேஷ், வாக்குச் சாவடி பொறுப்பாளா்கள் விக்னேஷ், செல்வம், சிதம்பரம், முத்து கோபால் மற்றும் நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com