வாணியம்பாடி அதிதீஸ்வரா் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் காலபைரவா்.
வாணியம்பாடி அதிதீஸ்வரா் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் காலபைரவா்.

வாணியம்பாடி கோயில்களில் காலபைரவாஷ்டமி விழா

Published on

வாணியம்பாடி: வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் கிராமத்தில் அமைந்துள்ள அதிதீஸ்வரா் கோயிலில் கால பைரவாஷ்டமி விழாவை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலை யாகம் மற்றும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில், வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசித்துச் சென்றனா். இதேபோன்று, வாணியம்பாடி சென்னாம்பேட்டை பாண்டுரங்கா் கோயிலில் கால பைரவா் ஜென்மாஷ்டமியை முன்னிட்டு கால பைரவா் ஹோமம், ருத்ர ஹோமம் மற்றும் மகா அபிஷேகமும், தொடா்ந்து இரவு 7 மணிக்கு அலங்கார மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள், சிறுவா்கள் கலந்துகொண்டு தரிசித்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com