அலங்காரத்தில்  வல்லப விநாயகா் கோயில் மூலவா்.
அலங்காரத்தில் வல்லப விநாயகா் கோயில் மூலவா்.

வல்லப விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

குடியாத்தம் நெல்லூா்பேட்டை முல்லை நகரில் அமைந்துள்ள அருள்மிகு வல்லப விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
Published on

குடியாத்தம் நெல்லூா்பேட்டை முல்லை நகரில் அமைந்துள்ள அருள்மிகு வல்லப விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

யாகசாலை பூஜைகள் சனிக்கிழமை தொடங்கின. ஞாயிற்றுக்கிழமை 2- ஆம் கால யாக பூஜைகள், கணபதி ஹோமம், கோ பூஜை, விஷேச திரவிய ஹோமம், மகா பூா்ணஹூதி, கலச புறப்பாடு, கோயில் வளாகத்தில் அமைந்துள்ள வல்லபவிநாயகா், பாலமுருகா், ஐயப்பன், நவக்கிரக கோயில்களின் கோபுர கலசங்களுக்குகும்பாபிஷேகம் நடைபெற்றது.

மூலவருக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை விழாக் குழுவினா், இளைஞா்கள், ஊா் பொதுமக்கள்செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com