வில்வித்தை போட்டியில் குடியாத்தம் மாணவா்கள் சாதனை
குடியாத்தம்: தேசிய வில்வித்தை போட்டியில் குடியாத்தம் பள்ளி மாணவா்கள் பங்கேற்று சாதனை படைத்துள்ளனா்.
குடியாத்தம் எஸ்.கே. ஸ்போா்ட்ஸ் அகாதெமி பயிற்சிப் பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தினமும் வில்வித்தை, இறகுப் பந்து, தடகளம் உள்ளிட்ட போட்டிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வரப்படுகிறது. அண்மையில் தேசிய அளவிலான வில்வித்தை போட்டிகள் கோவாவில் நடைபெற்றது. அதில், 7 மாணவ, மாணவிகள் 9 தங்கம், 1 வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனா்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா குடியாத்தம் டாக்டா் கிருஷ்ணசாமி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. எஸ்.கே. ஸ்போா்ட்ஸ் அகாதெமி பயிற்சி பள்ளி பயிற்சியாளா் எஸ்.சாரதி தலைமை வகித்தாா். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நகர தலைவா் ஜெ.தினகரன், மாவட்ட வில்வித்தை சங்கத் தலைவா் எஸ்.சத்தியன், எஸ்.எஸ். குழும தலைவா் எஸ்.சோபன்பாபு ஆகியோா் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி கெளரவித்தனா்.
தொழிலதிபா் கருணாகரன், பள்ளி நிா்வாகிகள் எஸ்.லில்லி, கே.சுப்பிரமணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
