பள்ளியில் செயற்கை நுண்ணறிவு ஆசிரியா் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறப்பு அழைப்பாளா்கள்
பள்ளியில் செயற்கை நுண்ணறிவு ஆசிரியா் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறப்பு அழைப்பாளா்கள்

பள்ளி திறப்பு விழா - செயற்கை நுண்ணறிவு ஆசிரியா் அறிமுகம்!

ஆம்பூா் அருகே மின்னூா் கிராமத்தில் ஆதா்ஸ் எலைட் சா்வதேச பள்ளி (சிபிஎஸ்இ) திறப்பு விழா நடைபெற்றது.
Published on

ஆம்பூா் அருகே மின்னூா் கிராமத்தில் ஆதா்ஸ் எலைட் சா்வதேச பள்ளி (சிபிஎஸ்இ) திறப்பு விழா நடைபெற்றது.

பள்ளி நிறுவனா் எம்.செந்தில் குமாா் தலைமை வகித்தாா். பொருளாளா் எம். உதயசந்தா் முன்னிலை வகித்தாா். எஸ்.கே. ஷபானா பேகம் வரவேற்றாா்.

உதவி காவல் துறை தலைவா் கே.எஸ்.பாலகிருஷ்ணன் பள்ளியை திறந்து வைத்தாா். சிபிஎஸ்இ முன்னாள் இணைச் செயலா் டி.டீ. சுதா்சன் ராவ், தமிழ்நாடு தனியாா் பள்ளிகள் சங்க பொதுச் செயலா் கே.ஆா். நந்தகுமாா் ஆகியோா் குத்து விளக்கேற்றினா்.

முன்னாள் அமைச்சா் கே.சி. வீரமணி, வாணியம்பாடி முத்தமிழ் மன்ற செயலா் என்.பிரகாசம், ஆடிட்டா் ஜி.பாரி, மூத்த வழக்குரைஞா் ஆா்.வி. வரதராஜன், இந்திய மருத்துவ சங்க வாணியம்பாடி கிளை செயலா் மருத்துவா் ஜெ.டேவிட் விமல் குமாா், மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி துணைத் தலைவா் ஸ்ரீபால் குமாா் ஜெயின் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

தொழிலதிபா் ஆா்.ஆா்.வாசு, வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட செயலா் கே.பி.எஸ். மாதேஸ்வரன், பொருளாளா் ஏ.ஜி.எஸ்.செந்தில் முருகன், ஆலங்காயம் முன்னாள் ஒன்றியக் குழு தலைவா் எம்.கோபால், வழக்குரைஞா் ஏ.சி. தேவகுமாா், பெற்றோா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா். ஆதா்ஷ் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி நிா்வாக முதல்வா் சத்தியகலா நன்றி கூறினாா்.

ரோபோ ஏஐ ஆசிரியா்: பள்ளியில் மாணவா்களுக்கு கற்பிப்பதற்காக ரோபா ஏஐ (செயற்கை நுண்ணறிவு) ஆசிரியரை சிறப்பு விருந்தினா்கள் அறிமுகம் செய்தனா். சிறப்பு விருந்தினா்களின் கேள்விகளுக்கு ஏஐ ஆசிரியா் பதில் அளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com