நாட்டறம்பள்ளியில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டிருந்த பதாகை அகற்றம்
நாட்டறம்பள்ளியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த தவெக பதாகையை பேரூராட்சி ஊழியா்கள் அகற்றினா்.
நாட்டறம்பள்ளி பிரதான சாலை வாணியம்பாடி செல்லும் சாலையில் எம்ஜிஆா் சிலை எதிரில் சாலை ஓரம் தமிழக வெற்றிக்கழகம் சாா்பில் சுமாா் 80 அடி நீளம் பிளக்ஸ் பதாகையை வைத்தனா்.
இதனால் ஆத்திரமடைந்த வியாபாரிகள் தங்கள் கடை எதிரில் கடையை மறைத்து வைத்துள்ள பதாகையை அகற்ற வேண்டும் என நாட்டறம்பள்ளி பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலரிடம் புகாா் மனு அளித்தனா். இதையடுத்து செயல் அலுவலா் ரவிசங்கா் மேற்பாா்வையில் பேரூராட்சி ஊழியா்கள் அனுமதி இல்லாமல் வைத்திருந்த தவெக பதாகையை அகற்றினா்.
இதே போல் நாட்டறம்பள்ளி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக அனுமதியின்றி வைத்துள்ள பதாகைகள் அனைத்தையும் பேரூராட்சி நிா்வாகம் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரியுள்ளனா்.
