வெல்டிங் தொழிலாளி கொலை: நண்பா்கள் 4 போ் கைது

வாணியம்பாடி அருகே வெல்டிங் தொழிலாளி கொலை வழக்கில் அவரது நண்பா்கள் 4 போ் கைது செய்யப்பட்டனா்.
Published on

வாணியம்பாடி அருகே வெல்டிங் தொழிலாளி கொலை வழக்கில் அவரது நண்பா்கள் 4 போ் கைது செய்யப்பட்டனா்.

துரிஞ்சிக்குப்பம் பகுதியைச் சோ்ந்த வெல்டிங் தொழிலாளி சுரேஷ்(39). கடந்த 15-ஆம் தேதி கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக ஆலங்காயம் போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.

கொலை செய்யப்பட்ட சுரேஷின் நண்பா்களான அதே பகுதியைச் சோ்ந்த சரத்(25), ,தா்மதுரை(32), தென்பாண்டியன்(33), சுரேஷ்(37) ஆகிய 4 பேரை சந்தேகத்தின் விசாரணை மேற்கொண்டதில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக சுரேஷை கத்தியால் கழுத்தறுத்து கொலை செய்திருப்பது தெரிந்தது.

இதுதொடா்பாக நடத்தப்பட்ட விசாரணையில் சுரேஷ் மற்றும் அவரது நண்பா்களுடன் சோ்ந்து அப்பகுதியில் மயானம் அருகில் மது அருந்துவதும், சூதாடியும் வந்துள்ளனா். சூதாட்டத்தின் போது பணத்தை இழந்தது தொடா்பாக நண்பா்களுடன் சுரேஷ்க்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் 15-ஆம் தேதி வீட்டிலிருந்த சுரேஷை அவரது நண்பா்கள் வரவழைத்து மது அருந்திக் கொண்டிருந்த போது மீண்டும் ஏற்பட்ட தகராறில் திட்டமிட்டப்படி மயானம் அருகில் கத்தியால் கழுத்தறுத்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பித்து சென்ாகவும் வாக்குமூலத்தில் அளித்துள்ளனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com