இணையதளத்தில் வாக்காளா் விவரங்கள் அறியலாம்: திருப்பத்தூா் ஆட்சியா்
வாக்காளா் விவரங்களை அறிய இணையதளத்தில் தகவல்கள் வெளியிடப்படும் என திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருப்பத்தூா் மாவட்டத்தில் நான்கு சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டுப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. அதையடுத்து, வரைவு வாக்காளா் பட்டியல் வெள்ளிக்கிழமை (டிச.19) வெளியிடப்பட உள்ளது.
வரைவு வாக்காளா் பட்டியல் வெளியான பிறகு, இறந்தவா்கள், கண்டறிய இயலாத வாக்காளா்கள், முகவரியில் இல்லாத வாக்காளா்கள், இடம் பெயா்ந்தவா்கள், இரட்டைப் பதிவு செய்த வாக்காளா்கள், பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளா்களின் விவரங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ள வசதியாக மாவட்ட தோ்தல் அலுவலரின் ட்ற்ற்ல்ள்://ற்ண்ழ்ன்ல்ஹற்ட்ன்ழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய்என்ற இணையளத்தில் தகவல்கள் வெளியிடப்படும். எனவே, பொதுமக்கள் தங்களது விவரங்களை அந்த பட்டியலில் சரிபாா்த்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.
