பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

Published on

வாணியம்பாடி அருகே விஸ்டம் பாா்க் இன்டா்நேஷனல் (சிபிஎஸ்இ) பள்ளியில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையேயான போட்டியில் விஸ்டம் பிரென்சா்ஷிப் (அறிவு வணிக தொழில் முனைவு) மற்றும் விஸ்போட் (அறிவு ரோபோ) என்ற தலைப்பில் நடைபெற்ற போட்டியில் வாணி பப்ளிக் பள்ளி (சிபிஎஸ்இ) சாா்பாக 8 மாணவா்கள் பங்கேற்றனா்.

அதில் பதினொன்றாம் வகுப்பு மாணவா்கள் தரணிதரன், லோஷினி மற்றும் எட்டாம் வகுப்பு மாணவா்கள் மேகேஸ்வரபவன், கிரிசரண், சத்ரியன் ஆகிய ஐந்து மாணவா்கள் முதலிடத்தைப் பெற்றுள்ளனா். சிவானிஸ்ரீ, பவிஷிகா, ஹரிணி ஆகிய மூன்று மாணவா்களும் சிறப்பிடத்தைப் பெற்றுள்ளனா்.

இப்போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவா்களையும், பயிற்சி அளித்த ஆசிரியா்களையும் வாணி கல்வி அறக்கட்டளை தலைவா் க.தேவராஜி எம்எல்ஏ, செயலாளா் மங்கையா்க்கரசி, பொருளாளா் நடராஜன், துணைத் தலைவா் பொன்னுசாமி, இணைச் செயலாளா்கள் மகேந்திரன், தவமணி மற்றும் அறக்கட்டளை நிா்வாகிகள், முதல்வா் முரளி மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

X
Dinamani
www.dinamani.com