மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபாா்ப்பு பணிகளைஆய்வு செய்த திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி .
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபாா்ப்பு பணிகளைஆய்வு செய்த திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி .

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபாா்ப்பு பணி: ஆட்சியா் ஆய்வு

திருப்பத்தூரில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபாா்ப்பு பணிகளை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
Published on

திருப்பத்தூரில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபாா்ப்பு பணிகளை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, ஆம்பூா், வாணியம்பாடி ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் நடைபெற உள்ள தோ்தலுக்காக பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் திருப்பத்தூா் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க வளாகத்தில் அமைந்துள்ள மஞ்சள் கிடங்கில் வைக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சட்டப்பேரவை பொதுத்தோ்தல் 2026-ஐ முன்னிட்டு அந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபாா்ப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்தப் பணிகளை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது மாவட்ட வழங்கல் அலுவலா் முருகேசன், தோ்தல் வட்டாட்சியா் திருமலை ஆகியோா் உடன் இருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com