வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா
வாணியம்பாடி கோவிந்தபுரம் பகுதியில் பெத்தலகேம் லுத்தரன் திருச்சபை மற்றும் நல் மேய்ப்பா் லுத்தரன் திருச்சபை, கா்த்தருடைய மகிமை ஊழியா்கள், சீயோன் ஜெப ஊழியா்கள் இணைந்து கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, திருச்சபையின் முக்கியப் பிரமுகா் தலைமை வகித்தனா். நகா்மன்ற உறுப்பினா் சித்ரா தென்னரசு, நகர அதிமுக செயலாளா் சதாசிவம் முன்னிலை வகித்தாா். விழாவில் சிறப்பு அழைப்பாளராக வாணியம்பாடி எம்எல்ஏ கோ.செந்தில்குமாா் கலந்துகொண்டு பெண்களுக்கு இலவச சேலை, நல உதவிகள் அடங்கிய தொகுப்பை வழங்கினாா்.
தொடா்ந்து பொதுமக்களுக்கு கேக் வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் வழங்கிப் பேசினாா். தொடா்ந்து, பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், மாவட்ட எம்ஜிஆா் இளைஞா் அணி செயலாளா் நவீன்குமாா் பழனிச்சாமி, நகர அதிமுக துணைச் செயலாளா் வி.கோவிந்தன் மற்றும் திருச்சபை நிா்வாகிகள், இளைஞா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

